கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் போடும் சாப்ட்வேரில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் சரியான நேரத்தில் சம்பள டோக்கன் பெற முடியாமல் அனைத்துத் துறை ஊழியர்கள் பல நாட்கள் கருவூலகங்களுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 9.0 வெர்ஷன் (பே ரோல்) சாப்ட்வேர் மூலம் சம்பளம் போடப்பட்டது. இந்த சாப்ட்வேர் மூலம் அந்தந்தத் துறையில் இருந்து சம்பளம் போட வேண்டிய லிஸ்ட் தயார் செய்து கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து டோக்கன் போட்டு வங்கிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் கிரிடிட் செய்யப்படும்.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அனைத்தும் ஆன் லைன் ஆக்கும் முயற்சி நடந்து வரும் நிலையில் 9.0., வெர்ஷனுக்கு அடுத்தபடியாக இம்மாதம் 1ம் தேதி முதல் 9.1., வெர்ஷன் சாப்ட்வேர் (இ பே) மூலம் சம்பளம் போடும் பணியைத் துவக்கியுள்ளனர். இந்த சாப்வேர் போட்டதில் இருந்தே குழப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் "எர்ரர்' காட்டுவதால் கரூவூலத்திற்கு வரும் ஊழியர்கள் தினமும் திருப்பிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சிதம்பரம் பொதுப்பணி துறையில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக கருவூலத்திற்கும், அலுவலகத்திற்கு இன்னுமும் அலையாய் அலைந்து கொண்டுள்ளனர். ஆனாலும் இன்று வரை இன்னும் டோக்கன் போடமுடியவில்லை. இதே போல் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கும் சாப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்னையால் சம்பளம் போட முடியாமல் தவித்து வருகின்றனர். இதே நிலை இன்னும் 5 நாட்கள் நீடித்தால் பல அரசு ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைக்காது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவூலகங்களிலும் இதே பிரச்னையால் பலர் காத்து கிடக்கின்றனர். தற்போது உள்ள 9.1 சாப்ட்வேரில், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் "வருமான வரியில் கல்விக்கான கூடுதல் வரியில்' எர்ரர் காட்டுகிறது. இதனால் சம்பளம் போட முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் இதே பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், மாவட்ட கருவூல அதிகாரிகளோ, கம்ப்யூட்டர் துறை வல்லுநர்களோ இதனை உடனடியாக சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வருவாய்த் துறையை மிஞ்சும் கருவூலம்
கருவூலத்தில் காலடி எடுத்து வைத்தாலே லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. சம்பளம் போட டோக்கன் போடுவதற்கும் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதிலும் அரியர் பில் போட வேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம். 10 சதவிகிதம் கட்டிங் வெட்டினால் தான் பில் போடுவார்கள். அங்கு பில் போட்டால்தான் கணக்கில் பணம் போய் சேரும். லஞ்சம் வாங்குவதில் வருவாய் துறையினரை கருவூல அலுவலகத்தினர் மிஞ்சி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கவனம் கொஞ்சம் இத்துறையின் மீது பட்டால் பலதுறை அரசு ஊழியர்கள் நன்மை அடைவர் .

No comments:
Post a Comment