Tuesday, September 14, 2010

சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 பேர் கைது

கடலூர் : திருவிழாவில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் (57) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஊர்வலத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது.
மழை பெய்ததால், அதே பகுதியைச் சேர்ந்த உத்திராபதி கரகாட்ட நிகழ்ச்சியை மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என கூறினார். இதற்கு அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித் தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் முருகேசன் சமரசம் செய்து வைக்க முயன் றார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், சிலம்ப ரசன் உட்பட 15க்கும் மேற்பட்டோர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை திட்டி தாக்கி, பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இது குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிந்து சிலம்பரசன் (23), அரிகிருஷ்ணன் (23), குப்புசாமி (27) ஆகியோரை கைது செய்து உத்திராபதி உட்பட 15 பேரை தேடிவருகின்றனர்.

No comments: