கடலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற் றுடன் பெய்த கன மழையால் பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து நகரம் இருளில் மூழ்கியது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுரீரென வெயில் அடித்த நிலையில் திடீரென நேற்று இரவு 10.30 மணிக்கு பலத்த மழையுடன் சூறாவளிக் காற்று வீசியது. ஒரு மணிநேரத் திற்கும் மேலாக நீடித்த மழை மற்றும் காற் றால் கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர், கண்ணகி நகர் மற்றும் கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் மின் கம் பங் கள் முறிந்தன.இதனால் 11 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவுக்குப் பின்னர் 2 மணிக்கு சரி செய் யப் பட்டு மின்சாரம் வழங் கப்பட்டது.மேலும் சூறாவளிக் காற்றில் கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையம், ராமாபுரம், எம். புதூர், எஸ்.புதூர் உள் ளிட்ட பல இடங்களில் 50 ஏக்கருக்கும் மேற் பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் பதிவான மழை அளவு மி.மீ., வருமாறு:பண்ருட்டி 30, வானமாதேவி 28.4, பரங்கிப் பேட்டை 27, விருத்தாசலம், குப்பநத்தம் தலா 9.4, மேமாத்தூர் 5, காட்டுமைலூர் 14, வேப்பூர் 18, தொழுதார், பெலாந்துறை 2, கீழ்செருவாய் 3 என மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 37 மி.மீ., பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment