Monday, September 13, 2010

மாணவ, மாணவிகளுக்கான வங்கி சேமிப்பு கணக்கு துவக்கம்

சிதம்பரம்:சிதம்பரம் சிட்டி யூனியன் வங்கியில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான சேமிப்பு கணக்கு துவங் கப்பட்டது.சிதம்பரம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், மாணவ, மாணவிகளுக் காக ஜூனியர் இந்தியா என்ற பெயரில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கப் பட்டுள்ளது. அதற்கான துவக்க விழா சிதம்பரம் அடுத்த விபீஷ்ணபுரம் "தி ஸ்கூலில்' நடந்தது.வங்கிக் கிளை மேலா ளர் நடேசன் தலைமை தாங்கி சிறுசேமிப்பு கணக்கு துவக்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை வழங்கினார்.பணம் சேமிப்பதற்கான உண்டியல் வங்கி சார்பில் வழங்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில் 75 மாணவ, மாணவிகளுக்கு கணக்கு துவங்கப்பட்டது.வங்கி அதிகாரி உஷா, ஊழியர்கள் சுரேஷ், உமா மகேஸ்வரி, நாகராஜன், சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: