Wednesday, September 08, 2010

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் ஸ்டிரைக்

அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கோரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட் டப்படிப்பு 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பாடத் திட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் நேரிடையாக முதுகலை படிக்கலாம். இப்பாடத் திட்டத்திற்கு 2009ம் ஆண்டு வரை அரசு அங்கீகாரம் பெறப்படவில்லை. இது தொடர்பாக கடந்த ஏப்., 9ம் தேதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசியதை அடுத்து தற்போது பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒருங்கிணைந்த பாடத் திட்ட மாணவ, மாணவியர் ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயில் முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் உடனே வழங்க பல்கலைக்கழகம் தரப்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். மூன்றாண்டு முடித்தவர்களுக்கு இளங்கலை பட் டம் வழங்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

No comments: