விருத்தாசலம் பூந் தோட்டம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் தண்ணீர் வசதி இல்லாததால் நான்காண்டுகளாக பயன்பாடின்றி வீணாகி வருகிறது.விருத்தாசலம் சிதம்பரம் ரோடு பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தண்ணீர் தேவைக்காக போர்வெல் போடப்பட்டது.
அதில் சரிவர தண்ணீர் கிடைக்காததால் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாததால், நவீன சுகாதார வளாகம் கடந்த நான்கு ஆண்டுகளாக காட்சி பொருளாகவே உள்ளது.பல லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது சூதாடும் விடுதியாகவும், கட்டணமில்லா "பாரா'க பயன்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் சுகாதார சீர் கேட்டை தடுத்திட கட்டப் பட்ட சுகாதார வளாகத் திற்கு விரைவில் தண்ணீர் வசதி செய்து கொடுத்து பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment