பண்ருட்டி அருகே அரசு புறம் போக்கு நிலத்தை திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.டி.ஒ.,வை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் ஊராட்சியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் 45 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வருவாய்த் துறையினர் இடம் தேர்வு செய்தனர். அந்த இடத்தில் உள்ள முந்திரி மரங்களை அகற்ற அவற்றை ஏலம் விட முடிவு செய்யப் பட்டது.இதனையடுத்து கடந்த 27ம் தேதி ஏலத்தேதி ஒத்தி வைக்கப் பட்டு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஏலத்தை நடத்துவதற்காக நேற்று பண்ருட்டி துணை பி.டி.ஒ., (சிறு சேமிப்பு) மணி, மின்னாளர் மோகன் ஆகியோர் காலை 9 மணிக்கு கீழக்குப்பம் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றனர்.அங்கு 150 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகம் முன் திரண்டு, "ஊராட்சி தலைவர் இல்லாமல் ஏன் இங்கு வந்தீர்கள். உயர்நிலைப் பள்ளிக்கு இடம் பற்றாக்குறை உள்ளதால் பள் ளிக்கு இடம் தேவை. அதனால் திருநங்கைகளுக்கு ஒதுக்கிய இடத்தை வழங்கக் கூடாது' என அதிகாரிகள் இருவரையும் ஊராட்சி அலுவலகத்தில் சிறை பிடித்து கோஷம் எழுப்பினர்.துணை பி.டி.ஒ., தனது அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் பி.டி.ஒ., மற்றும் தாசில்தார், போலீசார் ஒருவரும் வரவில்லை.பின் பொதுமக்கள் வரும் 13ம் தேதி கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது என முடிவு செய்து 1.30 மணிக்கு இரண்டு அதிகாரிகளையும் விடுவித்தனர்.
No comments:
Post a Comment