கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒரே இடத்தில் 8க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.கடலூர் அரசு மருத்துமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளை சேர்த்துவிட்டு, விவரங்களை டாக்டர் மற்றும் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அளித்து விட்டு மீண்டும் அவர்களுக்கு ஓதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆனால் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு வந்த எட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளா கத்திலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.து குறித்து விசாரித்த போது, கடலூர் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும் தொழிநுட்ப உதவியாளருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னை ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விவகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பினரையும் அரசு மருத்துமவனைக்கு அழைத்து பேச்சுவார்தை நடத்தியது தெரியவந்தது.அவசர தேவைக்கான அழைப்பு வந்தவுடன், அடுத்த அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய ஆம்புலன்ஸ், எந்தவித தகவல்களையும் அவர்களுக்கு தகவல் அளிக்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் ஒரே இடத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்தி வைத்திருந்ததை பத்திரிகை போட்டோகிராபர்கள் படம் எடுத்ததும், டிரைவர்கள் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ்களை எடுத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment