கடலூர் துறைமுகத்திலிருந்து கள்ளத் தோணி மூலம் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலூர் துறைகத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகக "க்யூ' பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் தேதி கடலூர் துறைமுகம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பைகளுடன் வந்த 28 பேரை "க்யூ' பிராஞ்ச் போலீசார் பிடித்தனர்.விசாரணையில், 18 பேர் முகாமில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதும், மீதமுள்ள 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அரசின் அனுமதியின்றி கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்வதற்காக ஏஜண்டுகளிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.இந்த வழக்கில் கடலூர் துறைமுகம் போலீசார் ஏற்கனவே 7 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னை புழல் இலங்கை அதிகள் முகாமைச் சேர்ந்த ரவியை (40) நேற்று கடலூர் துறைமுகம் போலீசார் கைது செய்தனர்.
Saturday, September 21, 2013
இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்பமுயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment