எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி பட்டயப் பயிற்சி துவங்க உள்ளது என, மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.அவரது, செய்திக்குறிப்பு:
கடலூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2013-14ம் ஆண்டுக்கான 15வது அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி வரும் அக்டோபர் 20ம் தேதி துவங்குகிறது. இதில், அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத பணியாளர்களுக்கு பயிற்சி பெற வாய்ப்பாகும்.இதற்கு, கல்வித் தகுதியாக பழைய 11வது வகுப்பு (ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி.,) அல்லது புதிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர, விண் ணப்பம் கடலூர், பீச்ரோட்டில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு விற்பனை நிலையத்தில், வரும் 16ம் தேதி, முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.விவரங்களுக்கு, எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 04142-222619 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment