வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் நேற்று முன்தினம் 43 மி.மீ., மழை கொட்டியதால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் வலுவிழந்தது. இருப்பினும், வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் மழை தொடர்ந்தது. கடலூர் மாவட்டத்திலும், மழை நீடித்தது. கடலூரில், அதிகபட்சமாக 43 மி.மீ., மழை கொட்டியது.மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:கடலூர் 43.1, வானமாதேவி 21.6, ஸ்ரீமுஷ்ணம் 21, பரங்கிப்பேட்டை 7, அண்ணாமலை நகர் 6.6, சேத்தியாத்தோப்பு 4, பண்ருட்டி 3, கீழ்ச்செருவாய், கொத்தவாச்சேரி, சிதம்பரம் பகுதிகளில் தலா 2 மி.மீ., விருத்தாசலம் 1.2, லால்பேட்டை 1 மி.மீ., மழை பெய்தது.கடலூரில் கொட்டிய திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கனமழை காரணமாக புதிதாக போடப்பட்ட சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி வருகிறது.
Friday, September 13, 2013
கடலூரில் கனமழை ஒரே நாளில் 43 மி.மீ, பதிவு

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment