கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ராஜம்முதலியார் சாவடியை சேர்ந்தவர் சீனுவாசன்(வயது 42). இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சீனுவாசன் செல்லங்குப்பம் ரெயில்வே கேட் அருகில் தனக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை பார்த்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
செல்லங்குப்பம் வள்ளிவிலாஸ்நகர் அருகில் வந்தபோது 3 மர்ம நபர்கள் அவரை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சீனுவாசனை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சீனுவாசன் மனைவி சங்கரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை வழிமறித்து தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment