Sunday, September 08, 2013

கடலூர் செல்வ விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கடலூர், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
இதனை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் "பாஷ்யம் அரங்கம்' என்ற பெயரில் மண்டபத்தை யுவராஜ் திறந்து வைத்தார். நேற்று காலை பாலிகை பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், அக்னி சங்க்ரஹணம், ரக்ஷா பந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.
இன்று (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 3 :00 மணிக்கு 4ம் கால யாக பூஜை, 5:00 மணிக்கு யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை செல்வ விநாயகர் ஆலய வழிபடுவோர் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் மணிவண்ணன், செல்வராஜன், அருணாசலம், கணபதி, ஆலோசகர் பால தண்டாயுதம், யுவராஜ் செய்து வருகின்றனர்.

No comments: