கடலூர் - மங்களூர் இடையே அரசு பஸ் இயக்க வேண்டுமென மங்களூர் ஊராட்சி தலைவர் அன்பரசு கோரிக்கை விடுத்துள்ளார்.அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கடலூர் மாவட்டத்தின் கடைசியில் உள்ள மங்களூர், ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ளது. இங்கு 66 ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பல்வேறு அலுவல்களுக்கு வந்து செல்கின்றனர்.இங்கிருந்து மாவட்டத் தலைநகரான கடலூருக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை. இதனால் மங்களூரிலிருந்து மூன்று பஸ்கள் மாறி, நான்கு மணி நேரம் பயணத்திற்கு பிறகே கடலூர் செல்லும் நிலை உள்ளது.எனவே, மங்களூரிலிருந்து கடலூருக்கு நேரடி அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment