Friday, September 13, 2013

பெட்ரோல் விலை உயர்வுபொதுமக்கள் அதிருப்தி



பெட்ரோல் விலை ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.விலை உயர்வு குறித்து மக்களின் கருத்துபாபு, கடலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம்:ஏற்கனவே ஆட்டோ தொழில் நலிவடைஞ்சிருக்கு. இந்த நிலையில, மத்திய அரசு, வாரத்திற்கு ஒருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது.இதனால், எங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் மேலும் குறைகிறது. ஒவ்வொரு முறையும், பெட்ரோல் விலையை உயர்த்தம் போதும், ஆட்டோ வாடகையை உயர்த்தினால், எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகராறு தான் நடக்கும். இதே நிலை நீடித்தால் ஆட்டோ தொழில் முற்றிலுமாக அழிந்துவிடும்.வெங்கடேசன், அச்சக உரிமையாளர், கடலூர்:பெட்ரோல், டீசல் விலையை வாரம் ஒருமுறை உயர்த்துவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.மாத வருவாயில், பெரும்பகுதியை வாகனத்திற்கு பெட்ரோல் போட செலவிட வேண்டியுள்ளது. விழுப்புரம் தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் அனுஷா கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நான் தினம் பைக்கை பயன்படுத்தி வருகிறேன். எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி விலையேற்றம் செய்துள்ளதால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் கடுமையாக பாதிக்கிறோம். எனவே பெட்ரோல் விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்என்றார்.விழுப்புரம், மகாராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், அடிக்கடி விலை ஏற்றத்தை தவிர்த்து, ஆண்டிற்கு ஒருமுறை விலை ஏற்றம் செய்யதால், திட்டமிட்டு செலவு செய்ய வாய்ப்பு இருக்கும். விலை ஏற்றத்தால் மீண்டும் சைக்கிளில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

No comments: