Saturday, September 21, 2013

கடலூர் போலீசாரால் தேடப்பட்ட இலங்கை அகதி சென்னையில் கைது

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை சேர்ந்த 26 பேரை கடலூர் வழியாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு படகில் தப்பி செல்ல உதவ முயன்ற வழக்கில் ஏஜெண்டுகள் 7 பேரை கடலூர் துறைமுகம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராஜூ மகன் ரவி(வயது 40) என்பர் தலைமறைவாக இருந்ததால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை புழலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரவி தங்கி இருப்பதாக கடலூர் துறைமுகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து. போலீசார் சென்னை புழலில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று ரவியை கைது செய்து கடலூருக்கு கொண்டு வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments: