வீடு புகுந்து பணம் திருடிய வழக்கில் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம், ஜானகிராம் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 1993ம் ஆண்டு வீட்டிலிருந்த போது, மர்ம நபர்கள் தாக்கி 11 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியை (50) தேடி வந்தனர்.பத்து ஆண்டுக்கு பிறகு தஞ்சாவூர், அய்யம்பேட்டையில் இருப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சென்று ராமசாமியை கைது செய்தனர்.
No comments:
Post a Comment