கடலூர் முதுநகர் அருகே உள்ள மணல் குவாரியில் இருந்து கிராவல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று கம்மியம்பேட்டை, குண்டுசாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. கடலூர் ஆல்பேட்டை குண்டுசாலை அருகில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த குடிசைக்குள் புகுந்தது.
இதில் குடிசைக்குள் சமையல் செய்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா(வயது 32) படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment