Monday, September 30, 2013

கடலூர், ராமநத்தத்தில் இருந்து கண்டரகோட்டை வரை வேலை பிச்சை கேட்டு நடைபயணம்

கடலூர்,
வேலை பிச்சை கேட்டு வீதிவீதியாக நடைபயணம் செல்லும் போராட்டத்தில் ஈடுபட கடலூர் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டம்
தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி. வேல்முருகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ். முத்துதமிழரசன், பண்ருட்டி வட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன் சிறப்புரையாற்றினார்.
நடைபயணம்
வேலை பிச்சை கேட்டு நடைபயணம் செய்யும் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் 28–ந் தேதி ராமநத்தத்தில் தொடங்கி விருத்தாசலம், முதணை, முத்தாண்டிகுப்பம், மருங்கூர், காடாம்புலியூர் வழியாக பண்ருட்டி கண்டரக்கோட்டை வரை 3 நாட்கள் திரளாக செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மங்களூர் ஒன்றியத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் மகளிர் அணி செயலாளர் கண்ணகி நன்றி கூறினார்.

No comments: