#Kallakurichi News 2021
#News
#Budget 2021
Welcome to Kallakurichi TV Channel
This Playlist for Kallakurichi News Video
Now Watch This Video
►https://youtu.be/E-2jOuHhlJc
Subscribe to Kallakurichi TV Channel
► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1
Connect With Kallakurichi TV on social media:
Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524
Instagram ►https://www.instagram.com/kallakurichitv
Twitter ► https://twitter.com/Kallakurichitv
Now watch Enjoy Life Tamil Channel Complete Video
► https://www.youtube.com/channel/EnjoyLifeTamil?sub_confirmation=1
Connect With Enjoy Life Tamil on social media:
Facebook ► https://www.facebook.com/tamilenjoylife
Instagram ►https://www.instagram.com/enjoylifetamil
Twitter ►https://twitter.com/enjoylifetamil
3-வது அலை அச்சம்: சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.
எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் நடைபெற்று வருகிறது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் சிறப்பான வகையில் திறமையை வெளிப்படுத்தினார். அரையிறுதியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார். இதில் வெற்றி பெற்ற பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை எதிர்கொண்டார். இதில் பவினா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பவினாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு
நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அந்த ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள் குப்பையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் மூலமே எரிகிறது. இதற்காக தினமும் 200 கிலோ வரை குப்பைகளை காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் சேகரிக்கின்றனர்.
அங்கு குப்பைகள் மூலம் பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தான் பிரதமர் மோடி நேற்று பாராட்டி உள்ளார்.
No comments:
Post a Comment