Saturday, September 14, 2013

கடலூர், விழுப்புரம் மாவட்டம், 2 ஆயிரத்து 650 டன்உர மூட்டைகள் வந்து சேர்ந்தன


கடலூர், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான 2 ஆயிரத்து 650 டன் உர மூட்டைகள் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
ஆயத்தமான விவசாயிகள்
கடலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு தேவையான உரம் கிடைத்திடும் வகையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரிசாவில் இருந்து உர மூட்டைகள் வந்து சேர்ந்தன.
2 ஆயிரத்து 650 டன்
இப்கோ நிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு உர மூட்டைகள் வந்து சேர்ந்தன. 44 ரெயில் பெட்டிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 650 டன் அளவில் உர மூட்டைகள் வந்திருந்தன.
இவை அனைத்தும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு லா£ரிகள் மூலமாக ஏற்றி அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதனால் விவசாய பணிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments: