Saturday, September 14, 2013

தே.மு.தி.க., ஆண்டு விழா

தே.மு.தி.க., ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா, விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்தது.முன்னாள் நகரச் செயலர் சரவணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் கார்த்தி, ராஜ்குமார், ரமேஷ், மகளிரணி குணவதி, அரசிளங்குமரி உட்பட பலர் பங்கேற்றனர்.முத்துக்குமார் எம்.எல்.ஏ., கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். தொடர்ந்து இலவச தையல் இயந்திரம், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

No comments: