விருத்தாசலத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் மணலூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. நீல நிற கால்சட்டை மட்டும் அணிந்திருந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment