Wednesday, September 11, 2013

கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் திறக்காதநீர்தேக்கத் தொட்டி: குடிநீருக்கு மக்கள் அல்லல்

:குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கோரணப்பட்டில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்
ளனர்.குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கோரணப்பட்டில் தெற்கு தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்வேல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து 2010ம் ஆண்டு பண்ருட்டி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 3 லட்சம் ரூபாய் நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் 2 லட்சம் ரூபாய் செலவில் போர்வேல் அமைக்கப்பட்டது.போர்வேல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், தெற்கு தெருவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அருகில் உள்ள நிலங்களில் உள்ள போர்வேல் மூலம் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.தற்போது மின்தடை காரணமாக இந்த பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரணப்பட்டில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: