கடலூர் மாவட்டத்தில் சாலையோர உணவுகளும், பாக்கெட் குடிதண்ணீரும் தரம் குறைவாக உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் ராம்சிங் தலைமை தாஙகினார். பொதுச்செயலாளர் மெய்யழகன், வி.என்.கண்ணன், கணேசன், தங்கராசு, தமிழரசன், இஸ்ரேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழகத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவர்(நீதிபதி) பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. ஓட்டல் உணவுகளும், சாலையோர உணவு பொருட்களும், பாக்கெட் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீரும் தரக்குறைவாக உள்ளதால் வாங்கி சாப்பிடுபவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே நுகர்வோர்களுக்கு தரமான உணவுப்பொருளும், குடிதண்ணீரும் கிடைக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப அட்டை
மாவட்ட அளவில் விலைவாசி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதில் உள்ள நடைமுறையை எளிமையாக்கி எளிதில் குடும்ப அட்டை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கேபிள் டி.வி.க்கு மாதாந்திர கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது, ஆனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 150 ரூபாய் வரை வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment