கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் 2–ம் சனிக்கிழமை கடலூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சார்பான குறைகளை நிவிர்த்தி செய்வதற்கு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் இடமாறுதல் கோரிக்கைகளை தவிர பிற கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகின்றன.
இக்கூட்டத்தில் தற்போது ஆசிரியர் அல்லாத கல்வித்துறை பணியாளர்களும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வித்துறையைச்ச்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment