கடலூர் மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அரைகுறையாக உள்ள கலைஞர் வீடு கட்டும் திட்டம், "தானே' புயல் கான்கிரீட் வீடாக மாற்றியமைக் கப்பட்டு, தற்போது 13 ஒன்றியங்களில் 40 சதவீதம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமைக்கும் வகையில், கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், "கலைஞர் வீடு கட்டும் திட்டம்' கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தின்படி, கடலூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 409 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற தகுதி உள் ளவை என அடையாளம் காணப் பட்டன. இந்த குடிசைகளை 5 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக கட்ட திட்டமிடப்பட்டது.இத் திட்டம் துவக்கப்பட்ட ஆண்டில், திட்டமிடப்பட்ட வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், இத்திட்டம் பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், பசுமை வீடு திட்டம் முழு வீச்சில் துவங்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலால், கடலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். அதைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க, 90 ஆயிரம் "கான்கிரீட்' வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.ஏற்கனவே, இம் மாவட்டத்தில், கலைஞர் வீடு கட்டம் திட்டம், இந்திரா குடியிருப்பு திட்டம், பசுமை வீடுகள் திட்டம் என பல திட்டங்களில் வீடுகள் கட்டப்பட்டன. ரூ. 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் அர” மான்யத் தொகை போதுமானதாக இல்லாததால், பயனாளிகள் வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் தவித்தனர்.
இந் நிலையில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் துவக்கப்பட்டு, முடிக்கப்படாமல் உள்ள வீடுகளை "தானே' வீடுகளாக மாற்றிக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. "தானே' வீடுகள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுவதால், கலைஞர் வீடு திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் கிடைப்பது ஆறுதல் அளிக்கும்படியாக உள்ளது.
கடலூர் மாவட்டத்தில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 1,580 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் அரைகுறையாக இருந்தன. அவற்றைக் கணக்கெடுத்து, "தானே' வீடு கட் டும் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் இலக்கை அடைய முடியாமல் அதிகாரிகள் தவித்து வந்த நிலையில், அர” விதிகளைத் தளர்த்தியதால், தற்போது கணிசமான எண்ணிக்கையில் தானே வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் 40 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment