கடலூர்:உட்கட்சி தகராறில் ஒருவரைத் தாக்கிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.நெய்வேலி அடுத்த கைக்களார்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர், கொளஞ்சி. தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிளைச் செயலர்கள். இருவருக்கும் கட்சியில் உட்பூசல் இருந்து வந்தது. இந்நிலையில், கொளஞ்சி கட்டிய கொடிக்கம்பமேடையில் சங்கர் அமர்ந்திருந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கொளஞ்சி தனது ஆதரவாளர்களுடன் சென்று சங்கரை தாக்கினார்.புகாரின் பேரில், நெய்வேலி தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து, கொளஞ்சி, உத்திராபதி, வேல்முருகன், மோகன் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment