லாரன்ஸ் ரோட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதைப்பணிக்கு இடையூறாக இருந்த மின்மாற்றி அகற்றப்பட்டது.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதைப் பணி நடைபெற்று வருகிறது. ரயில் பாதைக்கு அடியில் கான்கிரீட் சிலாப்புகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதால் இணைப்புச்சாலைப்பணி துவங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரயில்வே கேட்டில் கிழக்கு பகுதியில் இணைப்புச்சாலை பணி துவக்கப்பட்டுள்ளது.சாலையில் பள்ளம் தோண்டினால், சுரங்கப்பாதை அருகே குட்ஷெட் சாலையையொட்டி உள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்துவிடும் அபாயம் இருந்ததால் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தன.இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் அகற்றப்பட்டு எதிர்திசையில் ரயில்வே கேட்டிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.எனவே இன்று முதல் கடைவீதியில் செல்லும் பொது மக்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டு சாலையின் மையத்தில் பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment