Tuesday, September 10, 2013

ஏணிக்காரன் தோட்டம், சுனாமி நகரில்குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

கடலூர் ஏணிக்காரன் தோட்டம், சுனாமி நகரில் நகராட்சி ஊழியர்களால் குப்பைகள் அள்ளப்படாமல் குடியிருப்பு பகுதிகளில் குவிந்துள்ளதால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 190 பேருக்கு கடந்த 2006ம் ஆண்டு ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது.கடலூர் நகராட்சிக்குட்பட்ட இக்குடியிருப்பில் நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் குப்பைகளை சேகரித்து குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இடத்தில் கொட்டுகின்றனர். இக்குப்பைகள் நகராட்சி குப்பை லாரிகள் மூலம் அள்ளப்படாததால் குடியிருப்பு பகுதியையொட்டி குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், காற்றடித்தால் குப்பைகள் மீண்டும் வீடுகள் எதிரே குவிகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏணிக்காரன் தோட்டம் மற்றும் சுனாமி நகரில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் அமைத்து, குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments: