கடலூர் சி.கே.கல்விக் குழுமங்களின் தாளாளர் ஹேமா சின்னிக்கிருஷ்ணன் காலமானார்.கடலூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் டாக்டர் ராஜகுமார், வழக்கறிஞர் அசோக்குமார், கெவின் கேர் மற்றும் சி.கே.கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கநாதன், குமாரவேல் ஆகியோரின் தாயார் ஹேமா சின்னிக்கிருஷ்ணன் (80).இவரின் சமூக சேவையை பாராட்டி, கலிபோர்னியா பல்கலைக் கழகம் "சேவா ரத்தினம்' விருது வழங்கி கவுரவித்தது. பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஹேமா சின்னிக்கிருஷ்ணன், நேற்று காலமானார்.இவரது உடல், மக்கள் அஞ்சலிக்காக பீச் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, சி.கே.கல்வி நிறுவன இயக்குனர் சந்திரசேகரன், அக்ஷரா வித்யாலயா பள்ளி தாளாளர் ரமணி சங்கர், விஜயலட்சுமி, குழந்தைகள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் மற்றும் சி.கே.கல்விக் குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment