Wednesday, September 11, 2013

அறக்கட்டளைதுவக்க விழா

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறனின் தந்தை புலவர் துரை நாகராசனார் முதலாம் ஆண்டு நினைவு தின விழா மற்றும் அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.தமிழக சுற்றுலா வாரியத் தலைவர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் சம்பத், புலவர் துரை நாகராசனார் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அறக்கட்டளையைத் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், எம்.எல். ஏ.,க்கள் முருகுமாறன், செல்வி ராமஜெயம், முன்னாள் அமைச்சர் கலைமணி, ஒன்றிய தலைவர் பாண்டியன், மணிகண்டன், ஊராட்சி குழு உறுப்பினர் ரேணுகா, புலவர் தில்லான், துரைசாமி, புகழொளி மற்றும் பலர் பங்கேற்றனர்.

No comments: