தமிழகத்தில் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவுசெய்துள்ள அரசு சொத்துக்கள்-Kallakurichi TV
தமிழகத்தில் 4 விமான நிலையங்கள், 491 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நிதி திரட்டும் வகையில், அரசின் சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதுடன் அதன் செயல் திறனை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 ஆண்டுகாலத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் திருச்சி விமான நிலையம் குத்தகைக்கு விடப்படும். கோவை, மதுரை விமான நிலையங்கள் அடுத்த நிதியாண்டிலும், சென்னை விமான நிலையம் அதற்கு அடுத்த நிதியாண்டிலும் குத்தகைக்கு விடப்பட உள்ளது.
491 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதில், உளுந்தூர்பேட்டை- பாடலூர் இடையேயான 94 கிலோமீட்டர் நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை- திண்டிவனம் இடையேயான 73 கிலோமீட்டர் நெடுஞ்சாலை, திருச்சி - பாடலூர் இடையேயான 38 கிலோமீட்டர் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி - தொப்பூர்கேட் இடையேயான 63 கிலோமீட்டர் நெடுஞ்சாலை, ஒசூர் - கிருஷ்ணகிரி இடையேயான 60 கிலோமீட்டர் 6 வழிச் சாலை, தாம்பரம் - திண்டிவனம் இடையேயான 61 கிலோமீட்டர் நெடுஞ்சாலை, திருச்சி புறவழிச் சாலையுடன் திருச்சி-காரைக்குடி இடையேயான 117 கிலோமீட்டர் நெடுஞ்சாலை ஆகியவை தனியார்வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.
என்எல்சி நிறுவனத்தின் சூரிய மின்சக்தி கட்டமைப்பு, காவிரி டெல்டா பகுதியில் எரிபொருள் குழாய்கள், தூத்துக்குடி வஉசி துறைமுகம், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் பாண்டிச்சேரி ஆகியவை குத்தகைக்கு விடப்படுகின்றன.
இதேபோல, பாரம்பரியமான நீலகிரி மலை ரயிலும் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செலவு அதிகரித்துள்ளதால், அதனை சமாளிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் எதுவும் நடக்கப் போவதில்லை என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன், மக்களுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என விமர்சித்துள்ளார்.
#Kallakurichi News 2021
#News
#Budget 2021
Welcome to Kallakurichi TV Channel
This Playlist for Kallakurichi News Video
Now Watch this Video
►https://youtu.be/2NKB74qfNFA
Subscribe to Kallakurichi TV Channel
► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1 Connect With Kallakurichi TV on social media:
Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524
Instagram ►https://www.instagram.com/kallakurichitv
Twitter ► https://twitter.com/Kallakurichitv
Now watch Enjoy Life Tamil Channel Complete Video
► https://www.youtube.com/channel/enjoylifetamil?sub_confirmation=1
Connect With Enjoy Life Tamil on social media:
Facebook ► https://www.facebook.com/tamilenjoylife
Instagram ►https://www.instagram.com/enjoylifetamil
Twitter ►https://twitter.com/enjoylifetamil
No comments:
Post a Comment